பள்ளிகளில் இந்தி திணிப்பிற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு!



*🔹🔸பள்ளிகளில் இந்தி திணிப்பிற்கு மகாராஷ்டிராவில் கடும் எதிர்ப்பு!*


➤➤. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி மொழிக் கட்டாயமாக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது


➤➤. இந்நிலையில், இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமென, அம்மாநில அரசின் மொழி ஆலோசனைக் குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்


➤➤. அக்கடிதத்தில், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தாய்மொழி கற்பிக்கப்பட வேண்டும். இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் அர்சின் முடிவு தேவையற்றது. இது ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையை அதிகரிப்பதுடன், மாணவர்கள் ஒரு மொழியையாவது முறையாகக் கற்கும் வாய்ப்பையும் குறைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


➤➤. மேலும், உயர் கல்விக்கு ஆங்கிலம் தேவைப்படுவதால் 2001ம் ஆண்டு முதல் ‘better English with better Marathi’ என்ற கொள்கையின் அடிப்படையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. 


➤➤. இந்தி மொழியால் மகாராஷ்டிராவிற்கு ஏற்பட்ட மொழியியல் மற்றும் கலாச்சாரச் சேதம் போல் வேறு எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனப் பல மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 


Image source:Tagaval Malabar

Content is made by news .


Popular posts from this blog

SSMB29 Set for Historic Release in 120 Countries: A Global Cinematic Phenomenon #globetettor

Apple iPhone 17 Pro Max Launch Date, Pre-Orders and Key Details

“Trump Is Alive: Golf Outing Crushes Wild Death Hoax”