ரஷ்யா-இந்தியா உறவுகளுக்கு புதிய உந்துதல்: கனிமொழி குழு முக்கிய சந்திப்பு
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு, ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று முக்கிய சந்திப்பை மேற்கொள்கிறது. இந்த குழு, இந்தியா மேற்கொண்ட 'சிந்தூர் நடவடிக்கை' குறித்த விளக்கங்களை வழங்கும் நோக்கத்துடன் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளது .
இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழி தலைமையிலான இந்த முயற்சி, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின் முடிவுகள், இந்தியா-ரஷ்யா உறவுகளில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் என நம்பப்படுகிறது.
Writer: Mohammed Usman.A