உச்ச நீதிமன்ற அதிரடி: டாஸ்மாக் ரெய்டுக்கு தடை – கூட்டாட்சி தத்துவத்தை அவமதித்த ED நடவடிக்கை!
டாஸ்மாக் ரெய்டில் உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு: அமலாக்கத்துறைக்கு தடை!
மொழிபெயர்ப்பு செய்தியும் தகவல் தொகுப்பும்: Mohammed Usman A.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அமலாக்கத்துறை (ED) நடத்திய ரெய்டுகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்தையே சிதைக்கும் வகையில் நடந்த இந்த நடவடிக்கைகள், வரம்பு மீறிய செயல் எனவே, ED விசாரணையை தற்காலிகமாக தடை செய்யும் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றம் கூறியது:
டாஸ்மாக் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாகும்.
மாநில அரசின் அனுமதி இல்லாமல் ED ரெய்டு நடத்துவது அரசியல் ஊக்குவித்த நடவடிக்கையாக கருதப்படும்.
இது கூட்டாட்சியை அவமதிக்கும் செயலாகும்.
இந்த உத்தரவு, மாநிலத்தின் நிர்வாக சுதந்திரத்திற்கு ஆதரவாகும் முக்கிய தீர்ப்பாக கருதப்படுகிறது. மேலும், மாநில அரசுகளின் அதிகார வரம்பை பாதுகாப்பது என்பது நாட்டின் அரசியல் சமநிலைக்கு முக்கியமானது என்பதையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
– எழுதியவர்: Mohammed Usman A.
உண்மை, நேர்மை, நியாயம் உங்கள் பக்கம்!
Image source:Newroomlive